Friday, August 15, 2025
HTML tutorial

கனரா வங்கியில் 59 கிலோ தங்கம் கொள்ளை..! மந்திர பொம்மை இருந்ததால் பரபரப்பு

கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள கனரா வங்கிக் கிளையில், அடகு வைக்கப்பட்ட 59 கிலோ தங்கம் மற்றும் ரூ.5.2 லட்சம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் கடந்த மே 25ம் தேதி நடந்துள்ளது. வங்கியின் அலாரத்தை செயலிழக்க வைத்து, போலி சாவியைப் பயன்படுத்தி இந்த கொள்ளை அரங்கேற்றப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News