லட்சத்தீவு கவரட்டி அருகே இந்தியப் பெருங்கடலில் படகில் சிக்கித் தவித்த 57 பேரை இந்திய கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.
கடந்த 14ம் தேதி கவரட்டி என்ற இடத்தில் இருந்து சுஹேலிபர் தீவுக்கு, மூன்று பணியாளர்கள், பயணிகள் 54 பேர் என மொத்தம் 57 பேரை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று புறப்பட்டது. படகு திடீரென பழுதானதால், உரிய இடம் செல்ல முடியாமல் அவர்கள் நடுக்கடலில் தவித்தனர்.
இந்த நிலையில், கடலோர காவல்படைக்கு லட்சத்தீவு நிர்வாகத்திடம் இருந்து மொத்தம் 57 பேர் இருந்த படகு காணாமல் போனதாக அழைப்பு வந்தது. இதனைத் தொடர்ந்து, கடலோர காவல்படை குழுவினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, கவரட்டி அருகே இந்தியப் பெருங்கடலில் பழுதான படகில் இருந்த 57 பேரையும் பத்திரமாக மீட்டனர்.