திருவள்ளூர் அருகே மூன்று ஆட்டோக்களில் ஆந்திராவிற்கு கடத்திச் செல்லப்பட்ட 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் வழங்கக்கூடிய பொது விநியோக இலவச ரேஷன் அரிசி ஆந்திர மாநிலம் வழியாக தொடர்ந்து கடத்தப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது. அதன் அடிப்படையில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் உள்ள ஆந்திர மாநில எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் நோக்கிச் சென்ற மூன்று ஆட்டோக்களை சோதனை செய்தபோது ஆந்திராவிற்கு கடத்தவிருந்த சுமார் ஐந்து டன் எடை கொண்ட ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மூன்று ஆட்டோ மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், அதேபோல் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற இரண்டு பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட ஐந்து நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.