கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
விராட் கோலி இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று (மே 12) திடீரென தனது ஓய்வை அறிவித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்ற நிலையில், அவரது இடத்திற்கு 5 வீரர்கள் போட்டிப்போடுவதாக கூறப்படுகிறது. சர்ஃபராஸ் கான், கே.எல்.ராகுல், ரஜத் படிதார், ஸ்ரேயாஸ் ஐயர், சாய் சுதர்சன் ஆகியோரில் யாரை இறக்கினால் சரியாக இருக்கும் என்ற சிந்தனையில் பிசிசிஐ இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.