ஆந்திராவில் இருந்து பக்தர்கள் சிலர், ராமேஸ்வரத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். கீழக்கரை அருகே சென்ற போது, சாலையோர ஓட்டலின் அருகே காரை நிறுத்தி உறங்கியுள்ளனர். அப்போது,
கீழக்கரையை சேர்ந்த மற்றொரு கார், நின்று கொண்டிருந்த ஆந்திரா கார் மீது அதிவேகமாக மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயந்த நிலையில், மற்றொருவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 7 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
