திருவாரூரில் டீசல் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளிடம் லஞ்சம் பெற்ற காவலர்கள் 5 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் டீசல் திருட்டில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க 3 லட்ச ரூபாய் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பெயரில் திருவாரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட 5 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இறுதிக்கட்ட விசாரணையை மேற்கொண்ட பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் தஞ்சாவூர் சரக டிஐஜி தெரிவித்துள்ளார்.