Friday, February 13, 2026

திருச்சியில் மர்மவிலங்கு கடித்து 47 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பண்ணப்பட்டியில் மேய்ச்சலுக்கு சென்ற செம்மறி ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து குதறியது. இதில் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 47 ஆடுகள் உயிரிழந்த நிலையில், ஆட்டின் உரிமையாளர்கள் ராஜேந்திரன் மற்றும் பொன்னுச்சாமி வேதனை அடைந்துள்ளனர்.

ஆடுகளின் கழுத்து, கால், வயிறு உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில், மர்மவிலங்கு கடித்து ரத்தத்தை உறிஞ்சி கொன்றுள்ளதை கண்டு, கிராமத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வருவாய் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related News

Latest News