இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் உள்ள தனியார் குழந்தை காப்பகத்தில் உதவி மேலாளராக பணியாற்றும் 44 வயதுடைய லிண்டி லியா என்ற பெண், அங்குள்ள 13 வயது சிறுவனுடன் நெருங்கி பழகியுள்ளார். பின்னர் போதைப்பொருள் கொடுத்து அந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை ஏற்படுத்தியுள்ளார்.
அதன்பிறகு காப்பகத்துக்கு வெளியிலும் சிறுவனை அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் புகார் அளித்ததால் போலீசார் இந்தப் பெண்ணை விசாரணைக்கு அழைத்து செல்போனில் உள்ள ஆதாரங்களை ஆய்வு செய்தனர். அதில் சிறுவனுடன் உல்லாசமாக இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அந்த பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பின்னர் அந்த பெண் சிறையில் அடைக்கப்பட்டார்.