Friday, July 25, 2025

சீனாவை நம்பி ஏமாந்து போன 44 நாடுகள்! வெடித்து சிதறிய ஏவுகணை

2018 முதல் 2024 வரை, உலகின் 44 நாடுகள் சீனாவிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் விமானங்களை வாங்கி வந்துள்ளன. பெரும்பாலானவை வளர்ந்துவரும் நாடுகளாகும். சீனாவின் முக்கிய வாடிக்கையாளர்களில் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, நைஜீரியா போன்றவை அடங்கும். இவை பல ஆண்டுகளாக சீனாவுக்கு அதிக நம்பிக்கை வைத்துள்ளன. ஆனால் அந்த நம்பிக்கை தற்போது பலருக்கு கடுமையான பின்னடைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

பாகிஸ்தானில் சீனாவுடன் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்ட ஷாஹீன்-3 ஏவுகணை சோதனையில் தோல்வியடைந்தது. இது அணுசக்தி நிலையம் அருகே விழுந்து வெடித்ததில் மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது. அதேபோல், சீனாவுடன் தயாரிக்கப்பட்ட JF-17 போர் விமானங்கள் தொழில்நுட்ப பிழைகள் காரணமாக செயலிழந்தன. விமானங்களின் ரேடார் மற்றும் ஏவுகணை அமைப்புகளில் சிக்கல்கள் ஏற்பட்டன. கடற்படைக்காக வாங்கப்பட்ட F-22P கப்பல்களிலும் இயந்திரக் கோளாறுகள், ரேடார் பிழைகள் போன்றவை தொடர்ந்து ஏற்பட்டன.

வங்கதேசமும் சீனாவிடம் வாங்கிய K-8W பயிற்சி விமானங்களில் சீரான செயல்பாடின்றி பல விபத்துகள் நடந்தன. அந்த விமானங்களில் உள்ள வெடிமருந்து அமைப்புகளில் தவறுகள் இருந்தன. அதே நேரம், சீனாவிடம் வாங்கிய FM-90 ஏவுகணை அமைப்புகளிலும் ரேடார் பிழைகள் தென்பட்டன. இதனால் நிதி நட்டமும், பாதுகாப்பு சிக்கல்களும் உருவாகின. ஆனாலும் மலிவு விலை, அரசியல் நெருக்கம் போன்ற காரணங்களால் இன்னும் பல நாடுகள் சீனாவிடம் ஆயுதங்கள் வாங்குவதையே தொடர்கின்றன.

இந்த சீன ஆயுதங்கள் மலிவாக இருந்தாலும், அவற்றின் தரம் மற்றும் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு நாடுகளில் பாரிய சந்தேகங்கள் உருவாகியுள்ளன. SIPRI தரவுகளின்படி, சீனாவின் மொத்த ஆயுத ஏற்றுமதியின் 77% ஆசிய நாடுகளுக்காகவும், 19% ஆப்பிரிக்காவுக்காகவும் செல்கின்றன. பாகிஸ்தான் மட்டும் சீன ஆயுத ஏற்றுமதியின் 63% ஐ வாங்குகிறது. ஆனால் அதன் பல ஆயுதங்கள் செயலிழந்து வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவரும் நிலையில், இது அந்த நாட்டுக்கே பெரும் பாதுகாப்பு சவால்களை ஏற்படுத்துகிறது.

இதேபோல, வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, இந்தோனேசியா, இலங்கை போன்ற நாடுகளும் சீனாவின் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் போர்கப்பல்களை வாங்கி வருகின்றன. ஆனால் பலர் சீன ஆயுதங்களில் ஏற்பட்ட செயலிழப்புகளால் திட்டவட்டமான பாதுகாப்பு செயல்பாடுகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.

இந்த நாடுகள் தற்போது சீனாவின் தொழில்நுட்ப திறன் குறைபாடுகள் மற்றும் தர சிக்கல்கள் காரணமாக நஷ்டங்களை எதிர்கொண்டு வருவதால் வருத்தப்படுகின்றன. இந்த நம்பிக்கையின் முடிவுகள் பாதுகாப்பு மட்டுமல்ல, நாட்டின் நிதி, அரசியல் நிலை மற்றும் உலக தரத்தில் சீனாவின் நம்பகத்தன்மையையும் பாதிக்கின்றன.

இந்த சூழ்நிலையில், இந்தியா கவலைப்பட வேண்டிய அவசியம் உண்டு. பாகிஸ்தான் போன்ற எதிரி நாடுகள் செயலிழக்கும் ஆயுதங்களை பயன்படுத்தினாலும், சீனாவின் தாக்கம் அதன் இராணுவ வணிகத்தின் மூலம் சுற்றியுள்ள நாடுகளில் அதிகரித்து வருகிறது. மேலும், இந்த நெருக்கங்கள் பக்கத்து நாடுகளில் சீன செல்வாக்கை வலுப்படுத்தும் விதத்தில் செயல்படலாம். எனவே இந்தியா இந்த வளர்ச்சிகளை கவனமாக கண்காணிக்க வேண்டும்.

குறைந்த விலைக்காக தரம் தள்ளுபடி செய்யும் நாடுகள், வெறும் ஆயுதங்களில் அல்ல, பாதுகாப்பு எண்ணத்தில் தவறுகளை ஏற்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை இந்த அனுபவங்கள் நினைவுபடுத்துகின்றன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news