லாரி ஓட்டுநர் ஒருவரிடம் 43 லட்ச ரூபாய் சுங்கக் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ள சம்பவம்
இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆனால், இது நம் நாட்டில் அல்ல. ஆஸ்திரேலியாவில்.
ஜேசன் க்ளெண்டன் என்ற டிரக் ஓட்டுநர், நியுசௌத் வேல்ஸில் உள்ள ஒரு சுங்கச்சாவடி வழியாக
அடிக்கடி சென்றுவந்துள்ளார். ஒவ்வொரு முறை செல்லும்போதும் டோல் நிறுவனம் சுங்க வரியாக
அவரின் வங்கிக் கணக்கிலிருந்து 75 ஆயிரம் ரூபாயைக் கழித்துள்ளது.
ஜேசனின் வங்கிக் கணக்குப் புத்தகத்தில் அவரது வரவுசெலவுகள் பதியப்பட்ட போதுதான், தவறுதலாக
அவரின் வங்கிக் கணக்கிலிருந்து 57 ஆயிரம் டாலர் தொகை ஒரு டோல் நிறுவனம் இந்தத் தொகையைப்
பெற்றுள்ளதை அறிந்தார். இந்திய மதிப்பில் இது 43 லட்சத்துக்கு சமம் ஆகும். இதையறிந்து ஜேசன்
அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
தவறாகக் கழிக்கப்பட்ட தொகையைத் திரும்பப் பெறுமாறு போக்குவரத்து நிறுவனத்திடம் கேட்டார்.
ஆனால் அவரின் கோரிக்கையை ஏற்க ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் மற்றும் ரோடு ஏஜன்சி மறுத்துவிட்டது.
ஜேசனின் பணத்தை கிரெடிட் நோட் மூலமே திரும்பத் தருவதாகக் கூறியுள்ளது. ஆனால், இந்த கிரெடிட்
நோட் ஆப்சனே எனக்கு வேண்டாம் என்று ஜேசன் கூறியுள்ளார்.
அதேசமயம், நியூ சௌத்வேல்ஸ் டிரான்ஸ்போர்ட்டின் தலைமைச் செயல் அதிகாரி இந்த சம்பவத்துக்கு
மன்னிப்பு கோரியுள்ளார். பணம் தவறுதலாக வரவு வைக்கப்பட்டுள்ள ஓட்டுநருக்கு அனைத்துத்
தொகையையும் நிறுவனம் திரும்பத் தரும் என்று உறுதியளித்துள்ளார்.
டோல் சாலையைப் பயன்படுத்துவதற்கான வழக்கமான கட்டணத்தைவிட அதிகமான கட்டணம்
வசூலிக்கப்பட்டுள்ளது ஓட்டுநர்களையும் வாகன உரிமையாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.