பிளிப்கார்ட்டில் ஏசர் ஜி பிளஸ் சீரிஸ் 43 இன்ச் 4K ஸ்மார்ட் கூகுள் டிவி தற்போது 51 சதவீத தள்ளுபடியுடன் ரூ.23,188 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் வாங்கினால் கூடுதலாக ரூ.1,500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால் இந்த டிவியை ரூ.21,688 விலையில் வாங்க முடியும்.
ஏசர் ஜி பிளஸ் சீரிஸ் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி, 4K அல்ட்ரா எச்டி டிஸ்பிளே உடன் வருகிறது. இதில் 3840 x 2160 பிக்சல் தீர்மானம், சிறந்த பிரைட்னஸ், எச்டிஆர் 10 ஆதரவு மற்றும் 1.07 பில்லியன் நிறங்கள் போன்ற அம்சங்கள் உள்ளன. இதனால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கிறது.
இந்த டிவியில் குவாட் கோர் கார்டெக்ஸ் A55 பிராசஸர் மற்றும் மாலி G31 ஜிபியு வழங்கப்பட்டுள்ளது. இதனால் வேகமான செயல்திறனும் மேம்பட்ட கேமிங் அனுபவமும் கிடைக்கிறது.
30W திறன் கொண்ட டால்பி அட்மாஸ் ஆதரவுள்ள ஸ்பீக்கர்கள் இதில் உள்ளன. இதனால் வீட்டிலேயே திரையரங்க அனுபவத்தை பெறலாம். மேலும் பல்வேறு ஆடியோ அம்சங்களும் இதில் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஸ்மார்ட் டிவி 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் வருகிறது. இதன் மூலம் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். வாய்ஸ் கண்ட்ரோல் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் இதில் உள்ளது. அந்த ரிமோட்டில் ஓடிடி தளங்களுக்கான ஷார்ட்கட் பட்டன்களும் வழங்கப்பட்டுள்ளன.
