Saturday, December 6, 2025

43 நாட்கள் நீடித்த நிதி முடக்கம்! டிரம்ப் செய்த அதிரடி! கையெழுத்தாகும் மசோதா!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதன்கிழமை அதாவது நவம்பர் 12 இரவு அரசின் நிதி மசோதாவில் கையெழுத்திட்டதன் மூலம், 43 நாட்களாக நீடித்த அரசாங்க நிதி முடக்கம் முடிவுக்கு வந்துள்ளது.
அமெரிக்காவின் நிதியாண்டு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய நிதியாண்டு அக்டோபர் 1-ல் தொடங்குகிறது.

இதற்கான ஆண்டு செலவின மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை ஆதரவு பெற வேண்டும். குறிப்பாக, செனட் அவையில் குறைந்தது 60% உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே நிதி விடுவிக்கப்படும். ஆனால், அக்டோபர் 1 அன்று தேவையான பெரும்பான்மை ஒப்புதல் கிடைக்காததால், இந்த ஆண்டு அரசின் நிதி மசோதா தோல்வியடைந்து, பல துறைகள் செயலிழந்தன.

இதனால், ராணுவம், எல்லை பாதுகாப்புப் படை, விமானக் கட்டுப்பாட்டு துறை போன்ற அத்தியாவசிய துறைகள் மட்டும் இயங்கின. மற்ற அரசு ஊழியர்கள் பணியாற்ற முடியாமல், அவர்களுக்கான ஊதியமும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், சில ஜனநாயக கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன், செனட் சபையில் மசோதா நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 222 வாக்குகளும், எதிராக 209 வாக்குகளும் பதிவாகின. பின்னர், ட்ரம்ப் அந்த மசோதாவில் கையெழுத்திட்டார்.

கையெழுத்திடும் விழாவில் பேசிய அவர், ‘ நாங்கள் மிரட்டல் அல்லது அழுத்தத்துக்கு ஒருபோதும் பணியமாட மாட்டோம். அமெரிக்க மக்கள் இதை மறந்துவிடக் கூடாது; இடைக்காலத் தேர்தலில் ஜனநாயக கட்சியின் நடத்தை நினைவில் கொள்ளுங்கள்,’ என்று தெரிவித்தார்.

இந்த மசோதா ஜனவரி 30 வரை அரசுக்கு நிதி உதவியை நீட்டிக்கிறது. இதனால் அரசு முழுமையாக இயங்கத் தொடங்கும்; அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு திரும்பி, அவர்களுக்கு ஊதியமும் வழங்கப்படும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News