பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு கடத்தப்பட்ட 427 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சேலம் மாநகர பகுதிகளில் குட்கா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்படி முள்ளுவாடி கேட் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், குஜராத் மாநில பதிவெண் கொண்ட காரை மறித்து சோதனை செய்தனர்.
இதில் காரில் குட்கா கடத்தப்பட்டது தெரியவந்தது. சுமார் 427 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், வட மாநில இளைஞர் உட்பட இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
