மேற்கு வங்காளத்தை சேர்ந்த சஷாந்த் என்பவர் தனது மனைவி லிவிகா மற்றும் மகன் அபிஷேக் (4) உடன் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை சஷாந்த்தின் மைத்துனர் மகன் பண்ணை உரிமையாளரின் நாட்டு தூப்பாக்கியை பொம்மை தூப்பாக்கி என நினைத்து சுட்டதில் சிறி பாய்ந்த குண்டு அபிஷேக் மீது பாய்ந்தது. இதில் அபிஷேக் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக 15 வயது சிறுவன் மீதும், துப்பாக்கியின் உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.