ராஜஸ்தானில் பள்ளி கூரை இடிந்து விழுந்ததில் 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பிப்லோடியில் உள்ள அரசு பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் இடிபாடுகளில் சிக்கி 5ம் வகுப்புக்குட்பட்ட 4 மாணவிகள் உயிரிழந்த நிலையில், 40க்கும் மேற்பட்ட சிறுமிகள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.
பள்ளி திறக்கப்பட்ட சிறிதுநேரத்திலேயே மேற்கூரை இடிந்து விழுந்து கோர விபத்து நடந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கிய மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸுகள் விரைந்துள்ளன.