சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருமங்கலம் 7-வது சாலையில் மருத்துவர் பாலமுருகன், அவரது மனைவி வழக்கறிஞர் சுமதி தம்பதி, மற்றும் 2 பிள்ளைகள் ஜெஷ்வந்த்குமார், லிங்கேஸ்வரன் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு இவர்கள் அனைவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலிசார் விசாரணை நடத்தினர். அப்போது மருத்துவர் பாலமுருகன் 5 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பிரச்சனையில் சிக்கி இருந்த நிலையில் மீள முடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.