Thursday, July 31, 2025

ராஜஸ்தானில் மண் திடீரென சரிந்து விழுந்ததில் 4 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் இன்று (29-06-2025) காலை, குழாய் பதிக்க 10 அடி ஆழத்தில் தோண்டிய பள்ளத்தில் மண் திடீரென சரிந்து விழுந்தது. இதில் 12 தொழிலாளர்கள் மண்ணுக்குள் சிக்கினர். இந்த சம்பவத்தில் 4 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் 5 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மண் அகற்றும் இயந்திரங்களை பயன்படுத்தி சிக்கியவர்களை மீட்க முயற்சி எடுத்து வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News