Friday, May 16, 2025

ஒரே ஆண்டில் 3வது ‘காயம்’ BCCIன் ‘பிராடுத்தனம்’ உடைபடுகிறதா?

IPL தொடருக்கு எந்தளவுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறதோ, அந்தளவுக்கு எதிர்ப்புகளும் இருக்கின்றன. உலகின் மிகப்பெரும் பணக்கார கிரிக்கெட் வாரியம் என்பதும், ICCன் தலைவராக ஜெய்ஷா இருப்பதும் BCCIக்கு வசதியாகப் போய் விட்டது.

IPL தொடருக்காக BCCI இஷ்டத்துக்கு விதிகளை மாற்றிக்கொண்டே செல்கிறது. குறிப்பாக காயத்தால் விலகும் வீரர்கள் முழு உடற்தகுதியை எட்டுமுன்னே, அவர்களை மீண்டும் விளையாட வைப்பதாக நீண்டகால குற்றச்சாட்டு ஒன்று BCCI மீது உள்ளது.

இந்தநிலையில் அண்மை சம்பவம் ஒன்று இந்த குற்றச்சாட்டை உறுதி செய்துள்ளது. IPL தொடரில் சுமார் 156 கிலோ மீட்டருக்கும் அதிகமாக பந்துவீசி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இளம்வீரர் மயங்க் யாதவ், மீண்டுமொரு காயத்தால் தொடரில் இருந்து விலகியிருக்கிறார்.

ஒரே ஆண்டில் 3வது முறையாக அவர் காயமடைந்து உள்ளார். ஏற்கனவே காயத்தால் IPL தொடரின் முதல் பாதியை மிஸ் செய்த மயங்க், மீண்டும் அணிக்கு அண்மையில் தான் திரும்பினார். அதற்குள் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.

இதனால் IPL தொடருக்காக இளம்வீரர்களின் எதிர்காலத்தை, BCCI கேள்விக்குறி ஆக்குகிறதா? என்னும் கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முன் இந்திய அணி டெஸ்ட் தொடரில் வெல்ல வேண்டும் என, முழு Fitness எட்டும் முன்பே பும்ராவையும் இதுபோல இந்திய அணியில் BCCI ஆட வைத்தது.

தற்போது IPL தொடரில் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக, மயங்க் மீண்டும் முழு உடற்தகுதியை எட்டும் முன்பே அவருக்கு Fitness சர்டிபிகேட் வழங்கி அணியில் இணைத்து விட்டது. ஆனால் 2 போட்டிகளுக்கு மேல் அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

தொடரில் இருந்தே ஒரேயடியாக வெளியேறி விட்டார். இதைப்பார்த்த பலரும், ”IPL கவர்ச்சிக்காக இந்திய அணியின் எதிர்காலத்தை ஒரேயடியாக சிதைத்து விடாதீர்கள்” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Latest news