Thursday, December 25, 2025

திமுக நிர்வாகி வீட்டில் 300 சவரன் நகைகள் திருட்டு!

திமுகவின் டெல்லி பிரதிநிதி, மாநில விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ் விஜயன் வீடு தஞ்சையில் உள்ள சேகரன் நகர் பகுதியில் அமைந்துள்ளது. அவரது குடும்பத்தினர் வெளியூர் சென்றதால் அவரது வீடு பூட்டி இருந்துள்ளது.

இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் நேற்று இரவு அவரது வீட்டில் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து 300 பவுனுக்கு மேல் தங்க நகைகள், வைர நகைகள், வெள்ளி பொருட்கள், ரொக்க பணம் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் மோப்பநாய் உதவியுடன் கைரேகை நிபுணர்களுடன் தற்போது சோதனை செய்து வருகின்றனர்.

திமுகவின் முக்கிய நிர்வாகியான ஏ.கே.எஸ் விஜயன் அவரது இல்லத்திலேயே கொள்ளையடிக்கப்பட்டுள்ள இந்த சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Related News

Latest News