வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி. நடத்தினர். பாராளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர். 25 கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான எம்.பி.க்களை காவல்துறை தடுத்து நிறுத்தியது.
இந்நிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கனிமொழி, ஜோதிமணி உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த 300 எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.