சென்னை புறநகர் பகுதியான பூந்தமல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் வடமாநிலத்தவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசார் தகவல் கிடைத்தது. இது தொடர்பாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் சோதனை செய்தனர்.
அப்போது பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரை பரிசோதனை செய்தனர். அவர்கள் வைத்திருந்த சூட்கேஸை பரிசோதனை செய்ததில் அதில் 30 கிலோ கஞ்சா வைப்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஓடிசா மாநிலத்தை பிரான்சி மாலி மற்றும்
மஞ்சு சிற்கா என்பது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் இருவர் மீதும் கஞ்சா வழக்கு பதிவு செய்து பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.