Saturday, April 26, 2025

Play Offக்கு ‘துண்டு’ போட்ட 3 அணிகள் ‘நச்சுன்னு’ 4வது இடம் யாருக்கு?

நடப்பு IPL தொடரில் இதுவரை இல்லாத அதிசயமாக டெல்லி, பெங்களூரு அணிகள் அதிரடி காட்டி பாயிண்ட் டேபிளில் மேலே இருக்கின்றன. ஆண்ட பரம்பரை, மம்பட்டி டீம் என்று அழைக்கப்படும் சென்னை அதலபாதாளத்தில் கிடக்கிறது.

இதேபோல நடப்பு சாம்பியன் கொல்கத்தா, அதிரடி பேட்டர்களை வைத்திருக்கும் ஹைதராபாத் உள்ளிட்ட அணிகளும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருகின்றன. இந்தநிலையில் இதுவரையிலான போட்டிகளின் அடிப்படையில், Play Off வாய்ப்பினை 3 அணிகள் உறுதி செய்துள்ளன. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.

அந்தவகையில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ் ஆகிய 3 அணிகளுக்கும் Play Off சான்ஸ் பிரகாசமாக இருக்கிறது. அடுத்து வரும் போட்டிகளில் ஏதேனும் மூன்றில் வென்றால் கூட Play Offல் எளிதாக நுழைந்து விடலாம். பெரிதாக எந்த மெனக்கெடலும் தேவையில்லை.

மீதமுள்ள 1 இடத்திற்கு மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் என 3 அணிகள் முட்டி மோதுகின்றன. இதில் Play Off அதிர்ஷ்டம் யாருக்கு அடிக்கப் போகிறது?, என்று தெரியவில்லை.

அதேநேரம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 4 அணிகளும், Play Off ரேஸிலிருந்து வெளியேறி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news