காவலர் என்று கூறி கொள்ளை அடிக்க முயன்ற முன்னாள் ராணுவ வீரர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை, வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு கண்காணிப்பு கேமரா பொறுத்தும் பணி செய்து வருகிறார். கடந்த வாரத்தில் இவரது வீட்டிற்கு வந்த நபர்கள் தங்களை காவலர்கள் என அறிமுகப்படுத்திக்கொண்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பித்த செந்தில்குமார் செல்போன் மூலம் அக்கம், பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால் அதற்குள் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்த புகார் பேரில் வடவள்ளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, காவலர் எனக்கூறி கொள்ளையடிக்க முயன்ற விஷ்ணுகுமார், இராமநாதபுரம் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஜிம்சன், இடிகரை கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
