ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ரஷ்ய எல்லைக்குள் சென்று உக்ரைன் படையினர் நடத்திய தாக்குதலால், இரு நாடுகளுக்கும் இடையேயான போர் பதற்றம் அதிகரித்தது.
இந்நிலையில் ரஷ்யா முழுவதும் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் ராணுவ தளங்களை குறி வைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
மாஸ்கோவிலிருந்து தென்கிழக்கே கிட்டத்தட்ட 180 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ரியாசான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.