பெண்ணின் கண்ணுக்குள் உயிருடன் 3 பூச்சிகள்

484
Advertisement

பெண்ணின் கண்ணுக்குள் உயிருடன் 3 பூச்சிகள் இருப்பதைக்கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயதுப் பெண்மணி ஒருவர், இரண்டு மாதங்களுக்கு முன்பு அமேசான் காடுகளுக்குள் சுற்றுலா சென்று வந்தார். அதன்பிறகு, 6 வாரங்களாக அவரது கண்களில் உறுத்தல் ஏற்பட்டது. கண்கள் சிவந்துபோயின. கண் இமை வீங்கியது..கண் இமைகளுக்குள் ஏதோ அசைவதுபோல உணர்ந்தார்.

இதனால் பயந்துபோன அந்தப் பெண்மணி, அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களிடம் கலந்தாலோசித்தார். அவர்களால் அப்பெண்ணின் பிரச்சினைக்கு சரியான தீர்வு காணமுடியவில்லை.

இந்த நிலையில், இந்தியாவுக்கு வந்தார். டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றார். அவரின் கண்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் அப்பெண்ணின் கண்ணிமைக்குள் 2 செ.மீ அளவுள்ள 3 பூச்சிகள் உயிருடன் உள்ளதைக் கண்டனர்.

அதைத்தொடர்ந்து அறுவை சிகிச்சைமூலம் 15 நிமிடங்களுக்குள் அந்த 3 பூச்சிகளும் வெளியே எடுக்கப்பட்டுவிட்டன. அந்தப் பூச்சிகள் மயாசிஸ் எனப்படும் மனிதத் திசுக்களில் உள்ள ஈ லார்வாவின் தொற்றால் ஏற்பட்ட புழுக்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மயக்க மருந்து கொடுக்காமலேயே அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாம்.