Wednesday, July 2, 2025

குஜராத்தில் லேசான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இன்று காலை 10.24 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவானது. கட்ச் மாவட்டத்தின் பச்சாவு நகரத்திற்கு வடக்கு-வடகிழக்கிலிருந்து 23 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் எந்தவொரு உயிர் சேதமோ அல்லது பொருள் சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news