3 அடி வாலிபரை மணந்த இளம்பெண்!

241
Advertisement

பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகா நீலகுந்தா கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ் இவருக்கு வயது 28.

இவர் அதே பகுதியில் பீடா கடை நடத்தி வருகிறார். பசவராஜ் 3 அடி உயரம் கொண்டவர்.

இதனால் அவருக்கு பல இடத்தில் பெண் தேடியும் வரன் அமையவில்லை.

Advertisement

இந்த நிலையில் விஜயாப்புரா மாவட்டம் கோலாரா தாலுகா கானி கிராமத்தை சேர்ந்த ருக்மணி கும்பார் என்ற பெண்ணுக்கு, பல்வேறு தோஷங்கள் காரணமாக திருமணம் தடைப்பட்டது.

இதுபற்றி அறிந்த பசவராஜ், ருக்மணியை திருமணம் செய்ய முடிவு செய்தார்.

இதன்பின்னர் 2 குடும்பத்தினரும் கலந்து பேசி பசவராஜ், ருக்மணி திருமணத்தை பிப்ரவரி 21-ந் தேதி நடத்தலாம் என்று முடிவு செய்தனர்.

அதன்படி 2 பேரின் திருமணமும் நேற்று நீலகுந்தா கிராமத்தில் வைத்து நடந்தது.

இதில் இரு குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டு புதுமண தம்பதியை வாழ்த்தினர்.