66 ஆவது வயதில் 38 வயதுப் பெண்ணை 2 ஆவதாகத்
திருமணம் செய்துள்ளார் இந்தியக் கிரிக்கெட்
அணியின் முன்னாள் வீரர்.
1982 ஆம் ஆண்டுமுதல் 1989 ஆம் ஆண்டுவரை இந்தியக் கிரிக்கெட்
அணியில் இடம்பெற்றிருந்தவர் அருண்லால். பஞ்சாப் மாநிலம்,
கபுர்தலாவில் 1955 ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1978 ஆம் ஆண்டில்
தேயிலை நிறுவனத்தில் வேலை பார்ப்பதற்காக கொல்கத்தா
நகருக்கு வந்தார்.
அங்கு கிரிக்கெட் ஆர்வம் தொற்றிக்கொள்ளவே வேலை பார்த்துக்
கொண்டே கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவந்தார்.
1982 ஆம் ஆண்டில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின்
மூலம் இந்திய அணிக்கு அறிமுகமானார். இந்திய அணிக்காக 16
டெஸ்ட் போட்டிகள், 13 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள
அருண்லால் தற்போது பெங்கால் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக
உள்ளார்.
இவரது வழிகாட்டுதலால் 2020 ஆண்டில் ரஞ்சிக் கோப்பை இறுதிச்
சுற்றுக்குப் பெங்கால் அணி தகுதிபெற்றது. தற்போது ரஞ்சிக் கோப்பை
கால் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது.
66 வயதாகும் அருண்லால் ஆசிரியராகப் பணிபுரியும் புல்புல் சஹா
என்ற 38 வயதுப் பெண்ணை நீண்டகாலமாகக் காதலித்து வந்தார்.
இவர்களின் காதல் தற்போது திருமணம் வரை வந்துள்ளது.
ரீனா என்ற பெண்ணை முதலில் திருமணம்செய்த அருண்லால் அவரை
விவாக ரத்து செய்துவிட்டார். ஆனால், ரீனா உடல்நலக்குறைவால்
பாதிக்கப்பட்டதால் அவருடன் இணைந்து வாழ்ந்துவருகிறார். தற்போது
முதல் மனைவியான ரீனாவின் சம்மதத்துடன் புல்புல் சஹாவை
மே 2 ஆம் தேதி திருமணம் செய்துள்ளார்.
இவர்களின் நிச்சயதார்த்தம் உள்ளிட்ட திருமணத்துக்கு
முந்தைய நிகழ்வுகளின் போட்டோக்கள் வலைத்தளங்களில் பரவி
வருகின்றன.