Tuesday, August 12, 2025
HTML tutorial

ஈரானில் இருந்து 290 இந்தியர்கள் டெல்லி வருகை

இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக குற்றம்சாட்டி கடந்த 13ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. ஈரானும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. இருநாடுகளும் ஒரு வாரத்திற்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்க இந்திய தூதரகம் ஆபரேஷன் சிந்து மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி முதல் கட்டமாக ஈரானில் இருந்து 110 இந்திய மாணவர்கள் நேற்று முன்தினம் தாயகம் திரும்பினர். இந்நிலையில், ஆபரேஷன் சிந்து திட்டத்தில் 2வது சிறப்பு விமானம் ஈரானில் இருந்து 290 இந்தியர்களுடன் நள்ளிரவு டெல்லி விமான நிலையம் வந்தடைந்தது. அவர்களை விமான நிலையத்தில் அவர்களது உறவினர்கள் கட்டித்தழுவி வரவேற்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News