உத்தரபிரதேச மாநிலம், ஹபூர் மாவட்டத்தின் புலந்த்ஷாஹர் பகுதியைச் சேர்ந்தவர் சச்சின். போதை பொருளுக்கு அடிமையான இவர் அங்குள்ள மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவரது வயிற்றில் 2 பேனா, 19 பிரஷ்கள், 29 ஸ்பூன்கள் இருப்பதைக் கண்டு டாக்டர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றினார்.
மருத்துவமனையில் வழங்கப்படும் உணவு போதுமானதாக இல்லை என்று கூறி கோபத்தில் இந்த பொருட்களை விழுங்கினேன் என சச்சின் கூறியதாக கூறப்படுகிறது. நாள் முழுவதும், தங்களுக்கு மிகக் குறைவான காய்கறிகளும், ஒரு சில சப்பாத்திகளும் மட்டுமே வழங்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.