தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் இன்று நாமக்கலில் பிரசாரம் செய்தார். இதையடுத்து கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். கரூரில் நடந்த பிரசாரக்கூட்டத்தில் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே பயங்கர நெரிசல் ஏற்பட்டது. தள்ளுமுள்ளுவில் சிக்கிய பலர் மயக்கமடைந்தனர்.
பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 29 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கரூர் விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்ட நிலையில், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோரை உடனடியாக செல்ல முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.