சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் தங்கத்தின் விலை, இன்று கிராமுக்கு ரூ.295 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,505-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2,360 குறைந்து ரூ.1,16,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து மாற்றம் கண்டு வரும் நிலையில், இன்றைய விலை குறைவு பொதுமக்கள் மற்றும் நகை வாங்கத் திட்டமிடுவோருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. இருப்பினும், சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் விலையில் மீண்டும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதேபோல், வெள்ளியின் விலையும் இன்று கணிசமாக குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.5,000 குறைந்து ரூ.2,60,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
