திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டினர் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூரில் பல்வேறு இடங்களில் வங்கதேசத்தினர் சிலர் சட்ட விரோதமாக தங்கியிருப்பது குறித்து, கோவை தீவிரவாத தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பெயரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர், 28 பேரை கைது செய்து மாநகர போலீசார் விசாரிக்கின்றனர். ஏற்கனவே, இம்மாதத்தில்,46 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.