கடந்த 5-ம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் தரளி கிராமம் முழுமையாக அழிந்தது. அந்த கிராமத்தில் பல்வேறு வீடுகள் வெள்ளம் மூழ்கியது.
வெள்ளத்தில் சிக்கிய 274 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். 9 ராணுவ வீரர்கள் உட்பட 59 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தரளி கிராமத்தின் சாலைகளை சீரமைத்து, குடிநீர், மின்சாரம், இணைய சேவைகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.