கேரளாவில் இதுவரை 273 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 73 பேருக்கும் எர்ணாகுளத்தில் 49 பேருக்கும் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சளி, இருமல், தொண்டை வலி அல்லது சுவாசப் பிரச்னைகள் உள்ளவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். நோய்த்தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் பொது இடங்களிலும் பயணங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும் என அம்மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.