2 ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முந்தைய 14 ஒயின் தொட்டிகள் ஈராக் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
வடக்கு ஈராக்கின் டுஹாக் மாகாணத்தில் சில மாதங்களுக்குமுன் இத்தாலியத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அகழாய்வில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பகுதியில் பாறையிலிருந்து வழிந்தோடும் நீரை வயல்களுக்குக் கொண்டுசெல்லத் தோண்டப்பட்ட சுண்ணாம்புக் கால்வாயைக் கண்டனர். கிட்டத்தட்ட 9 கிலோமீட்டர் நீளமுள்ள அந்தப் பாசனக் கால்வாயின் சுவர்களை அவர்கள் ஆய்வுசெய்தனர்.
அப்போது கால்வாய் அருகேயுள்ள மலைப்பாறைகளில் குடைந்தெடுக்கப்பட்ட 14 தொட்டிகளைக் கண்டனர். திராட்சைப் பழங்களை நொதிக்க வைத்து ஒயின் தயாரிப்பதற்காகக் குடையப்பட்ட தொட்டிகள் அவை என்பதையும். அந்தத் தொட்டிகள் மெசபடோமியா நாகரிக காலத்தைச் சேர்ந்தவை என்பதையும், வணிக நோக்கில் ஒயின் உற்பத்தி செய்வதற்காகத் தோண்டப்பட்ட தொட்டிகள் என்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
2 ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முந்தைய தொட்டிகளான இவற்றை யுனெஸ்கோ பாரம்பரிய தளத்தில் சேர்க்க முயற்சிசெய்து வருகின்றனர்.
மதுபானங்கள் காலங்காலமாகப் பருகப்பட்டு வந்திருப்பதை அறிந்து மதுபானப் பிரியர்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் இருப்பார்களோ…