ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் தொடங்கியுள்ள நிலையில், தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,030-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,20,240-க்கும் விற்பனையானது. கடந்த 15-ந்தேதியில் இருந்து நேற்று வரை சவரனுக்கு ரூ.6,480 உயர்ந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று தங்கம் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.15,010-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,20,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. தங்கம், வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள இந்த சிறிய சரிவு பொதுமக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
