Thursday, July 31, 2025

பாகிஸ்தான் சிறையிலிருந்து 216 கைதிகள் தப்பியோட்டம்

பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கராச்சியில் உள்ள மாலிர் சிறையில் இருந்த 1000க்கும் மேற்பட்ட கைதிகள் பிரதான வாயிலுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதனைப் பயன்படுத்தி, அந்தக் கைதிகளில் ஒரு குழுவினர் காவலர்களுக்கு எதிராக மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பணியில் இருந்த காவலர்களுக்கும், கைதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒரு கைதி பலியாகியுள்ளார். மேலும், 4 பாதுகாப்பு வீரர்கள் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பல்வேறு முக்கிய குற்றவழக்குகளில் கைதான 216 சிறைக்கைதிகள் அங்கிருந்து தப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. தப்பியோடியவர்களில் 75 பேர் தற்போது மீண்டும் சிறைப்பிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள கைதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News