நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் வட்டார அதிகாரி (Circle Based Officer) பதவிக்கான 2,050 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னை வட்டாரத்தில் மட்டும் 165 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்ப விவரங்கள் பின்வருமாறு:
பணி நிறுவனம்:
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI)
பதவியின் பெயர்:
வட்டார அதிகாரி (Circle Based Officer)
மொத்த காலிப்பணியிடங்கள்:
2,050
தமிழ்நாடு (சென்னை வட்டாரம்):
165 காலிப்பணியிடங்கள்
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
மேலும், வங்கிகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் அவசியம்.
வயது வரம்பு:
2025 டிசம்பர் 31-ம் தேதியின்படி,
விண்ணப்பதாரர்கள் குறைந்தது 21 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது 30 ஆக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
மொத்தம் 4 கட்டங்களில் தேர்வு நடைபெறும்.
- ஆன்லைன் தேர்வு
- தெரிவு செய்தல் (Screening)
- நேர்காணல்
- உள்ளூர் மொழி தேர்வு
இந்த அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்:
இப்பணியிடங்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.48,480 ஆகும்.
மொத்த சம்பள அளவு ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
18.02.2026
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் : https://sbi.bank.in/
தகுதியுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் குறிப்பிடப்பட்ட கடைசி தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
