Monday, October 6, 2025

தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எந்தெந்த தேதிகள் தெரியுமா?

தீபாவளி பண்டிகை வருகிற 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பொதுமக்கள் தீபாவளி கொண்டாட சொந்த ஊர் சென்று, மீண்டும் திரும்பி வரும் வகையில், சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர், அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறியது; ”தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு பேருந்துகள் வரும் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரையிலான 4 நாட்கள் இயக்கப்படும். சென்னையில் இருந்து மட்டும் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு 14,268 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகை முடிந்து மக்கள் சென்னை திரும்புவதற்காக 15,129 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News