2026 தேர்தலுக்கு தயராகி வரும் தமிழக வெற்றிக் கழகத்தில், கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த வேட்பாளர் தேர்வு பணி நிறைவு பெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், எந்தெந்த தொகுதியில் யார் யார் போட்டி? என்ற பட்டியலை விஜய் இறுதி செய்து விட்டதாகவும், திருச்செங்கோட்டில் இன்று என்.ஆனந்த், செங்கோட்டையன் பங்கேற்கும் கூட்டத்தில், வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் முதல் வேட்பாளராக தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், திருச்செங்கோடு வேட்பாளராக அறிமுகம் செய்யப்பட இருக்கிறார்.
