தற்போது இருக்கு இந்த நவீன உலகில் ஜியோ ஃபைபர் மற்றும் ஏர்டெல் ஃபைபர் ஆகிய 2 சேவைகளும் சேர்ந்து பல வீடுகளில் இருந்த கேபிள் டிவி இணைப்புகளை ‘கட்’ செய்து விட்டன. இதற்கிடையில் டாடா பிளே நிறுவனமும் அதன் டாடா பிளே ஃபைபர் (Tata Play Fiber) சேவையின்கீழ் சில தரமான திட்டங்களை தொகுத்து வழக்கிருக்கிறது.. இதனின் பங்கிற்கு இன்னும் சில கேபிள் டிவி இணைப்புகளை துண்டித்து கொண்டிருக்கிறது.
அப்படி என்ன “தரமான” திட்டங்களை வழங்குகிறது என்று தெரியுமா?
அதாவது, டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் பிராந்திய இன்டர்நெட் சர்வீஸ் வழங்குநரான டாடா ப்ளே ஃபைபர் ஆனது 100 Mbps ஸ்பீட் உடனான ஏராளமான விருப்பங்களை வழங்குகிறது. ஓடிடி நன்மைகள் உடனான 100 Mbps ஸ்பீட் திட்டத்தை பொறுத்தவரை, என்ட்ரி லெவல் பிளான் ஆக ரூ.900 டாடா பிளே ஃபைபர் லைட் பிளான் (Tata Play Fiber Lite Plan) உள்ளது.மேலும், மாதத்திற்கு ரூ.950 மற்றும் ரூ.1100 செலவாகும் இன்னும் 2 திட்டங்களும் உள்ளன.
6 மாதங்கள் அல்லது 1 ஆண்டிற்கு செல்லுபடியாகும் திட்டத்தை தேர்வு செய்தால், அந்த திட்டங்களுக்கான மாதாந்திர செலவு ஆனது குறைவானதாக இருக்கிறது..
அதாவது, ரூ.900 மதிப்புள்ள மாதாந்திர திட்டத்தின் பொறுத்தவரை, இந்த திட்டம் பல வகையான ஓடிடி நன்மைகளுடன் வருகிறது. டாடா பிளே பைபர் சேவையின் கீழ் கிடைக்கும் இதனை “பெஸ்ட் பிளான்” என்று கூறலாம்.ஏனென்றால் ரூ.900 திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்கள் ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar), ஆப்பிள் டிவி பிளஸ் (Apple TV+), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஜீ5 (Z5), சன் நெக்ஸ்ட் (SunNXT), ஆஹா (aha), ஃபேன்கோட் (Fancode), டிஸ்கவரி பிளஸ் (Discovery+) ஆகிய தளங்களிலிருந்து ஏதேனும் நான்கு ஓடிடி தளங்களை தேர்வு செய்துக் கொள்ளலாம்..
மேலும் இந்த பட்டியலில் எபிக்ஆன் (EPICON), ஷீமாரூமீ (ShemarooMe), ஹாங்காமா ஓடிடி (Hungama OTT), கிளிக் (KLIKK), சௌபால் (Chaupal), ஸ்டேஜ் (Stage), நம்ம பிளிக்ஸ் (NAMMAFlix), மனோரமா மேக்ஸ் (Manorama Max), ரீல் டிராமா (Reeldrama), பிடிசி (PTC), ஐஸ்ட்ரீம் (iStream), டிஸ்ட்ரோ டிவி (DistroTV) மற்றும் பிபிசி பிளேயர் (BBC Playe) ஆகியவைகளில் உள்ளன.
இது மட்டுமல்லால் இந்த திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்கள் அனிமேக்ஸ் (Animax), டிராவல் எக்ஸ்பி (TravelXP), ஹால்மார்க் (Hallmark), பிளே பிளிக்ஸ் (Playflix), ஷார்ட்ஸடிவி (ShortsTV), டாக்குபே (Docubay), க்யூரியாசிட்டி ஸ்ட்ரீம் CuriosityStream), விஆர் (Vr), மற்றும் பியூஸ் (Fuse) ஆகிய தளங்களுக்கான இலவசமாக பெறுவார்கள், மேலும் இந்த திட்டத்துடன் 200 க்கும் மேற்பட்ட சேனல்களும் கிடைக்கும். கூடவே இந்த திட்டம் இலவச Wi-Fi ரூட்டரையும, டேட்டா பொறுத்தவரை இந்த திட்டம் 3.3டிபி டேட்டாவை வழங்குகிறது.ஒரு வேளை 3300ஜிபி டேட்டாவையும் பயன்படுத்தி விட்டால், இன்டர்நெட் ஸ்பீட் ஆனது 3Mbps ஆக குறைக்கப்படும்…
மாதாந்திர திட்டத்தை தேர்வு செய்தால் டாடா பிளே நிறுவனத்திற்கு ரூ.500 இன்ஸ்ட்டாலேஷன் கட்டணம் செலுத்த வேண்டும்.மேலும்,நிறைய நன்மைகளுடன் டாடா ப்ளே ஃபைபர் திட்டங்களை கொடுத்திருக்கிறது..
குறிப்பாக, நாம் மேற்கண்ட அனைத்து விலைகளிலுமே வரிகள் சேர்க்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். அதாவது வரிகளுடன் மேற்கண்ட திட்டங்களின் விலைகள் சற்றே உயரலாம்..மேலும் ,திட்டங்களின் விலை மற்றும் நன்மைகள் அவ்வப்போது மாறக்கூடும்.இது மட்டுமல்லாமல், இதனின் விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ வலைத்தளம் பார்க்கவும்.