ஜவுளி நிறுவனங்கள் அதிநவீன இயந்திரங்களை வாங்குவதற்கு 20 சதவீதம் மானியம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
கோவை கொடிசியா வளாகத்தில், முதலாவது ஜவுளி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்து பேசினார். அப்போது, ஜவுளி நிறுவனங்கள் அதிநவீன இயந்திரங்களை வாங்குவதற்கு 20 சதவீத மானியம் வழங்கப்படும்.
மானியம் வழங்குவதற்கு ஆண்டுதோறும் 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறினார். ஜவுளி தொழிலை மேம்படுத்த தி.மு.க. அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
