சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் அடுத்தடுத்து 20 பறவைகள் உயிரிழப்பு

சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் 20-க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்ததால் அந்த பூங்கா தற்போது மூடப்பட்டுள்ளது.

கிண்டி சிறுவர் பூங்காவில் இன்று காலை முதலே பறவைகள் ஒவ்வொன்றாக இறந்த வண்ணம் இருந்தன. கரண்டிவாயன், நாரை, கூழைக்கடா, செங்கால் நாரை, கொக்குகள் உள்பட 20-க்குமே் மேற்பட்ட பறவை இறந்துள்ளன.

இவற்றை சோதனை செய்ததில் அவை பறவைக் காய்ச்சலால் இறந்தது தெரியவந்தது. பறவைகளின் எச்சம், அதன் பாகங்கள், இரக்கைகள், முடிகள் உள்ளிட்டவைகளின் மூலம் வைரஸ் கிருமி மக்களுக்கு தொற்றும் என்பதால் பூங்கா மூடப்பட்டுள்ளது.

Related News

Latest News