உறைபனியில் 2 இளைஞர்கள் உயிரோடு உறையும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
குளிர்காலத்தில் வீட்டைவிட்டு வெளியே சென்று நடமாடவே தயங்குவோம். அத்தகைய குளிரையே சமாளிக்கமுடியாத நிலையில், கடும் உறைபனியில் மூழ்குவோரின் மனநிலை எப்படி இருக்கும்? கற்பனை செய்து பார்ப்பதற்குள்ளே மனது உறைந்துவிடுகிறதல்லவா..?
ஆனால், அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில் உள்ள க்ரீவ் கோயர் ஏரிக்குள் உறைபனியில் 2 இளைஞர்கள் விழுந்துவிட்ட பதறவைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதியன்று அந்தப் பகுதியில் தீயணைப்பு வீரர்கள் பனி மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள க்ரீவ் கோயர் ஏரியின் நீர் உறைந்து தரைத்தளம்போல் காட்சியளித்தது. அதன்மீது 2 இளைஞர்கள் ஓடத் தொடங்கினர்.
அனைவரும் அதிர்ச்சி அடையும்விதமாக, அந்த இளைஞர்கள் ஓடிக்கொண்டிருக்கும்போதே 15 விநாடிகளில் பனிக்கட்டி உடைந்து ஏரிக்குள் மூழ்கத் தொடங்கினர்.
அதைப் பார்த்து அதிர்ந்துபோன 4 தீயணைப்பு வீரர்கள் ஓடிச்சென்று அவர்களைக் காப்பாற்றிவிட்டனர்.
மேரிலேண்ட் தீயணைப்பு வீரர்கள் வெளியிட்டுள்ள இந்த வீடியோ காண்போரின் இதயங்களை சில நொடிகள் உறையவைத்துவிடுகிறது.