Wednesday, February 5, 2025

திருச்சியில் நடப்பாண்டில் 2 ஆயிரத்து 414 பேர் கைது

திருச்சியில் நடப்பாண்டில் 2 ஆயிரத்து 414 பேர் கைது செய்யப்பட்டு, 10.19 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, திருச்சி மத்திய மண்டல IG கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நடப்பாண்டில் குற்ற வழக்குகள் சம்பந்தப்பட்ட 2 ஆயிரத்து 414 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 கோடியே 19 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள் கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி பாதிக்கப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் 48 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news