https://www.instagram.com/reel/CcJAhxTD_jz/?utm_source=ig_web_copy_link
ஒரு கோழியைத் தின்பதற்கு 2 பாம்புகள் சண்டையிட்டது
திகிலாகவும் வேடிக்கையாகவும் அமைந்துள்ளது.
2 பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து
நடனமாடுவதைப் பார்த்திருக்கிறோம். மிக அரிதாகத்
தங்களின் இரைக்காக 2 பாம்புகள் சண்டையிட்ட
இந்த சம்பவம் இணையத்தில் பரவலாகியுள்ளது.
பாம்புகள் பெரும்பாலும் பண்ணைகள் மற்றும் கோழிக்
கூடங்களுக்குள் புகுந்து குஞ்சுகளைக்கொன்று உண்ணும்
அல்லது கோழிமுட்டைகளை உண்ணும். எப்போதாவது
வயது முதிர்ந்த கோழிகளைக் கொன்று உண்ணும்.
ஆனால், அந்தக் கோழியை அவற்றால் செரிக்க முடியாது.
இருப்பினும் வயது முதிர்ந்த கோழிகளை உண்பதற்காகவோ
அதன் குஞ்சுகளை அணுகுவதற்கான வழிமுறையாகவோ
அவற்றைக் கொன்றுவிடும்.
இந்த நிலையில் ஒரு கோழியையும் அதன் குஞ்சையும்
உண்பதற்காக 2 பாம்புகள் சண்டையிட்டுள்ளன.
இதுதொடர்பான வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது.
பேராசைப் பிடித்த பாம்புகளாக இருக்குமோ?