சேலத்தில் கொள்ளை வழக்கில் இரண்டு பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த மஞ்சள்கல்பட்டி தேவன்ன கவுண்டனூரை சேர்ந்தவர் கண்ணம்மா. இவரது வீட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு வீட்டில் நுழைந்து மூதாட்டியை கத்தியை காட்டி மிரட்டி சுமார் 10 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
இந்த கொள்ளை வழக்கில் சக்திவேல், ராஜ்குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்த நிலையில், சாட்சியங்கள் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒருவருக்கு 500 ரூபாயும் மற்றொருவருக்கு 300 ரூபாயும் விதித்து சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி ஆபிரகாம் தீர்ப்பு வழங்கினார்.
