அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 84 வயது முதியவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது அவருக்கு உரிய நேரத்தில் சக்கர நாற்காலி வழங்காததால் தந்தையை மகன் கைத்தாங்கலாக இழுத்துச் செல்லும் வீடியோ வைரலாக பரவியது.
இந்த விவகாரம் தொடர்பாக அரசு மருத்துவமனை மேற்பார்வையாளர்கள் 2 பேரை 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி உத்தரவிட்டுள்ளார்.