சென்னை பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பெரும்பாக்கம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெரும்பாக்கம் அரசன் கழனி ஏரிக்கரை அருகில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்த போது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, இருவரும் ஒடிசாவை சேர்ந்த தனுஷ் ஜெயகாரா மற்றும் கமல் லைசன் கிலா என்பது தெரியவந்தது. விசாரணைக்கு பின் அவர்களிடம் இருந்த 101 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.